‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்துக்கு தற்காலிகமாக ‘விஜய் 60′ என படக்குழு பெயரிட்டுள்ளது.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு எங்கள் ‘வீட்டு பிள்ளை’ என்று தலைப்பு வைப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இதை படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது.
மேலும், இது வதந்தி மட்டுமே எனவும் தெரிவித்துள்ள அவர்கள் படத்தின் தலைப்பு என்ன என்பதை நாங்களே முறைப்படி அறிவிப்போம் என கூறியுள்ளனர்.அத்தோடு, படக்குழுவினரின் இந்த விளக்கத்தால் ‘விஜய் 60′ படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.